அழிஞ்சிவாக்கம் அரசு பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கூட்டம்
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்பில் நேற்று அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரி லட்சுமி வரவேற்றார்.
இதில் பங்கேற்ற பெற்றோர்களிடம் கல்வித்துறை சார்பில் தெரிவித்திருந்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சந்தோஷ் குமார், ரமணி சீனிவாசன், உமா மகேஸ்வரி சலம்மய்யா, உஷார் காயத்ரி சுரேஷ்குமார், சுபாஷினி சதீஷ்பாபு, தயாளன், முரளி, வக்கீல் ரமேஷ், ஊராட்சி செயலர் குமார் மற்றும் ஆசிரியர்கள் சுபாஷினி, மகிமா பொன்மலர், முருகேசன், விஜயா, நிர்மல் ஜோதி, சித்ரா, ஸ்டெல்லா மேரி ஜெயந்தி மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.