பெரியபாளையம் அருகே ஸ்ரீ சாய்பாபா கோவில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா கோலாகலம்..!

பெரியபாளையம் அருகே ஸ்ரீ சாய்பாபா கோவிலில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-25 09:00 GMT

பெரியபாளையம் அருகே ஸ்ரீ சாய்பாபா கோவிலில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை  நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்-ஆரணி இடையே ராள்ளபாடி பகுதியில் உள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. சாய்பாபா கோவிலின் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் காலை 8.30.மணி அளவில் யாக வேள்வி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, விநாயகர் வழிபாடு 108 கலச ஸ்தாபனம் தொடர்ந்து மகா கணபதி ஹோமம், கோபுர மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், 108 தாமரை மலர் மகாலட்சுமி ஹோமம், சாய்பாபா மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் யாகசாலையில் இருந்து 108 கலசங்களை பெண்கள் எடுத்துக்கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். இதையடுத்து, பாபாவிற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 12.15 மணி அளவில் பிற்பகல் ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் ஆரத்தி பாடலை பாடினர்.

பின்னர், சாய்பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயம் சார்பில் அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News