இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'; இரவு நேர பயணம், தேக்கடி படகு 'கட்'

Red Alert In Kerala- இடுக்கி மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இரவு நேர பயணத்திற்கும், படகு போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-02 03:31 GMT

தேக்கடி படகு போக்குவரத்து.

Red Alert In Kerala- இன்று முதல் நான்கு நாட்கள் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேர பஸ் பயணத்திற்கும், தேக்கடி படகு போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பலமாக பெய்து வருகிறது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இடுக்கி மாவட்டத்தில் அத்தனை மலைப்பாதைகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள அரசு இடுக்கி மாவட்டம் முழுவதும் இரவு நேர பயணத்திற்கு தடை விதித்துள்ளது. கேரளாவின் பிற மாவட்டங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேக்கடி (முல்லைப்பெரியாறு அணை நீர் தேக்கம்), இடுக்கி, யானையிரங்கல் உட்பட அத்தனை அணைகளிலும் படகு போக்குவரத்திற்கு நான்கு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News