ஜனாதிபதி மாளிகையில் விழா: மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி

ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்றார்.

Update: 2024-06-09 08:39 GMT

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி இன்று பதவி ஏற்றார்.

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பிரதமர் மோடி இன்று பதவியேற்றார்.

18 வது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த நான்காம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி 292 இடங்களில் கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களில் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மையான 272 தொகுதிகள் இல்லை என்றாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு கூட்டணி பலம் இருந்தால் பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி எம்பி க்களின் கூட்டத்தில்  மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு,   ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதி  ஆட்சி அமைப்பதற்கு அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் இன்று மாலை டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. இந்த விழாவில் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா மற்றும் வெளிநாட்டு அதிபர்கள் ,தூதர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சரியாக 7.15மணிக்கு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி தொடங்கியது .இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து  ராஜ்நாத் சிங், அமித்ஷா , பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர் ஆகியோரும் தொடர்ந்து  கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட  இணை அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு நாளை இலாகா ஒதுக்கப்படும் என அறிவிக்கப்ப்டடு உள்ளது.

பதவி ஏற்பு விழாவை தொடர்ந்து டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று இருப்பதால் அந்த வரலாற்றில் மோடி பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News