அதிமுக ஓட்டு வங்கி சரியவில்லையாம்: சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஓட்டு வங்கி சரியவில்லை என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Update: 2024-06-09 13:48 GMT

எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஒட்டு வங்கி சரியவில்லை என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கூறி உள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி தொடர்பாக அதிமுகவிற்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவே இந்த தோல்விக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

லோக்சபா தேர்தலில் அதிமுகவின் தோல்வியை ஊடகங்களில் விவாதிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். பாஜக அதிக ஓட்டுகள் பெற்றுள்ளதாக பேசப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி ,பாஜக தலைவர் நட்டா, மூத்த தலைவர்கள் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி உட்பட பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

திமுகவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ராகுல் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர் ஆனால் அதிமுகவுக்காக நான் ஒருவன் தான் பிரசாரம் செய்தேன். கூட்டணியில் தேமுதிகவில் பிரேமலதா விஜயகாந்த் உட்பட சிலரும் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இண்டியா கூட்டணிக்கு பலம் அதிகம் என்று மீடியாக்கள் தொடர்ந்து பேசினர்.

இவ்வளவுக்கும் மத்தியில் நடந்து முடிந்த தேர்தலில் 2019 லோக்சபா தேர்தலை விட அதிமுக ஒரு சதவீதம் கூடுதல் ஓட்டுகள் பெற்றுள்ளது. இது அதிமுக விற்கு  கிடைத்த வெற்றி. ஆனால் பாஜக கூட்டணி இந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்றதாக தவறான செய்திகள் வருகிறது. திமுக 2019 தேர்தலில் 33.52 செய்த ஓட்டுகள் பெற்ற நிலையில் இப்போது 26.93 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது. திமுகவின் ஓட்டு வங்கி சரிந்து உள்ளது. அதிமுகவுடன் ஒப்பிடும்போது திமுக பாஜக குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளன. அதிமுக ஒரு தேர்தலில் தோல்வியில் அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்று அர்த்தம் அல்ல. கட்சியில் இருந்து சசிகலா ,ஓபிஎஸ் பிரிந்து போனது முடிந்து போன கதை. இப்போது குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இணைவது தொடர்பாக பேசுகின்றனர். அவர்கள் பிரிந்து சென்றதால் சில இடங்களில் எங்களுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைத்துள்ளது.

சட்டசபை லோக்சபா தேர்தல் என மக்கள் புரிந்து தான் ஓட்டு போடுகிறார்கள். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை குறைவான ஓட்டுகள் தான் வாங்கி உள்ளார். சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் மக்கள் ஓட்டு போடுகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். தேசிய கட்சிகள் தேர்தல் வெற்றிக்கு பின்னர் தமிழகத்தை மறக்கின்றனர் என்பதற்காக இதை மாற்ற வேண்டும் என்பதற்காக தேர்தலில் தனித்து போட்டியிட்டு விட்டோம். ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் நாங்கள் சேர்ந்து இருப்போம். இப்போது திமுக கூட்டணியினர் லோக்சபாவில் என்னதான் சாதிக்க போகிறார்கள்.

பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணியில்லை என்ற கட்சியின் முடிவைத்தான் ஜெயக்குமார் கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி அதிமுகவின் ஓட்டு வாங்கி குறைந்துவிட்டது என்று அவதூறு பிரச்சாரத்திற்கு தேர்தல் முடிவுகள் வழியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News