மனித உடல் அற்பமானதா? அற்புதமானதா?
மனித வாழ்க்கை ஒரு புதிராகும். அதை நாம் வாழும்விதத்தில் உணரமுடியும்.;
மனித உடல் உண்மையிலேயே புதிரான ஒன்றுதான். மூளைக்கும் மற்ற உடல் உறுப்புகள் அத்தனைக்கும் தொடர்புகொள்ள வைத்தது யார்? இந்த புதிரை விடுவிக்க நாம் பல முயற்சிகள் செய்கிறோம். பணம், புகழ், பொருட்கள் என பல விஷயங்களை தேடி வாழ்க்கையை நிரப்ப முயற்சி செய்கிறோம். ஆனால், நம் கவனம் எங்கே செல்கிறது என்று கவனித்தால், அது நம் உடம்பு மேல்தான் செல்கிறது.
மனித உடல் மிக அற்பமானது. இந்த அற்பமான உடம்புக்கு ஆயிரம் விதமான உபசரணைகள் தேவை. உணவு, உடை, வாசனை, கார், பங்களா, குளிர்சாதன பெட்டி, இவை அனைத்தும் உடம்புக்காகவே. ஆனால், இந்த உடம்பு ஒரு நாள் மண் ஆகி விடும். அப்போது, நாம் தேடி சேகரித்த பொருட்கள் எல்லாம் எதற்கு?
அதே நேரத்தில், நம் உடலுக்குள் ஒரு அற்புதமான சக்தி உள்ளது. அதுதான் ஆத்ம சக்தி (Atma Sakthi). இந்த ஆத்ம சக்தியை நாம் தட்டி எழுப்பி உள்ளொளியை பெற்று, அந்த ஒளியால் பிரார்த்திக்க, எல்லாம் நல்லதே நடக்கும்.
யோகா என்பது ஒரு உடற்பயிற்சி முறை மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. யோகா மூலம் நம் மனதை அமைதிபடுத்த முடியும். நம் உடல் நலத்தை மேம்படுத்த முடியும். நம் ஆன்மாவின் சக்தியை உணர முடியும்.
நண்பர்களே, இன்று முதலே யோகா செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துங்கள். உங்கள் மனதை அமைதி படுத்துங்கள். உங்கள் ஆன்மாவின் சக்தியை உணர முயற்சி செய்யுங்கள். அப்போதுதான், உங்கள் வாழ்க்கை உண்மையான நிறைவை பெறும்.
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே- மாணிக்க வாசகர்
இறைவனின் கருணையால் இந்த ஊன் குறையும். அதாவது உடல் குறையும். ஆனால் உள்ளொளி பெருகும்.