தேனி வால்கரட்டில் கழிவுகள் கொட்டிய இரண்டு நிறுவனங்களுக்கு அபராதம்

தேனி வால்கரடு மலைப்பகுதியில் கழிவுகளை கொட்டிய இரண்டு நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வனத்துறை அபராதம் விதித்துள்ளது

Update: 2021-10-14 12:30 GMT

தேனி வால்கரடு வழியாக செல்லும் பைாபஸ் ரோட்டோரம் குப்பை, திரவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

தேனி வால்கரட்டில் கழிவுகளை கொட்டிய இரண்டு நிறுவனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டதாக தேனி வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, தேனி ரேஞ்சர் சாந்தகுமார் கூறியதாவது: தேனியில் நகரின் மையப்பகுதியில் 4 கி.மீ. துாரத்திற்கு வால்கரடு என்ற சிறிய மலைக்குன்று உள்ளது. இது வனத்துறையின் பராமரிப்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வருகிறது. இந்த மலைக்குன்றின் வழியாக பெரியகுளம் ரோட்டையும், புதிய பஸ்ஸ்டாண்டையும் இணைக்கும் பைபாஸ் ரோடு செல்கிறது. இரவில் இந்த வழியாக செல்லும் சிலர் வால்கரடு மலைப்பகுதியில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர். 

தேனியில் புதியதாக தொடங்கப்பட்ட ஒரு கட்டுமான நிறுவனம் கழிவுகளை கொட்டியது கண்டறியப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், மற்றொரு நிறுவனம் திரவக்கழிவுகளை கொட்டியது கண்டறியப்பட்டு அந்த நிறுவனத்திடமும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. வால்கரடு மலைக்குன்றினை பாதுகாக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது என்றார்.

Tags:    

Similar News