தேனி மாவட்டத்தில் 10 நாட்களாக சுற்றித்திரியும் சிறுத்தைபுலியால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கைலாசநாதர் மலைப்பாதையில் சிறுத்தை 10 நாட்களாக உலா வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-07-11 15:00 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைப்பாதையில் சிறுத்தை கடந்த ௧௦ நாட்களுக்கும் மேலாக உலா வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசநாதர் மலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு கீழே உள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த மலையை சுற்றிலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கைலாசநாதரர் மலை மேல் உள்ள கைலாதநாதர் சிவன் கோயிலை சுற்றி வர கிரிவலப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதை முழுக்க வனப்பகுதிகளை ஒட்டியே செல்கிறது. கடந்த பத்து நா ட்களாக இந்த பகுதியில் சிறுத்தை  உலா வருகிறது. இந்த சிறுத்தையை பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட வனத்துறையினர் பல  முறை முயன்றும் இதுவரை பிடிக்கவில்லை. இதனால் இந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சத்துடன் தவித்து வருகின்றனர்.


Tags:    

Similar News