சேந்தமங்கலம் அருகில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

சேந்தமங்கலம் அருகில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Update: 2023-04-12 07:30 GMT

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்.

சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டியில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம், பச்சுடையாம்பட்டி கிராமத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்  தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்வு, தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட நிகழ்வு, மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி, 75-வது சுதந்திர திருநாளையொட்டி தலைமை செயலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்த நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்கிய நிகழ்ச்சி, நீர்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்ச்சி, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் சம்மந்தமான நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

Tags:    

Similar News