குமாரபாளையம் பஸ்நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பும் பணி
குமாரபாளையம் பஸ் நிலைய வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.;
குமாரபாளையம் பஸ் நிலையம் வளாக குடிநீர் தொட்டியில் நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி குடிநீர் நிரப்பி வருகிறார்கள்.
குமாரபாளையம் பஸ் நிலையம் இடைப்பாடி சாலையில் அமைந்துள்ளது. இதனை புதுப்பிக்கும் கட்டுமான பணி நடந்து வருவதால், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, அம்மா உணவகம் பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர், தனியார் நிறுவன பணியாளர்கள், இங்குள்ள நகராட்சி கடை வியாபாரிகள், டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான நபர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
தற்போது கடும் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் தற்காலிக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் நிரப்பப்பட்டு வருகிறது. வெப்பத்தின் தாக்குதலால் இந்த குடிநீர் அடிக்கடி தீருவதால், நகராட்சி பணியாளர்கள் உடனுக்குடன் குடிநீர் தொட்டியில் குடிநீர் நிரப்பி வருகிறார்கள். இதனால் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வரும் பொதுமக்களுக்கு இல்லாத நிலை இருந்து வருகிறது.