மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
குமாரபாளையத்தில் மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.;
குமாரபாளையத்தில் மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, விநாயகர் கோயில் பகுதியில் வசிப்பவர் அருண்குமார் (வயது40.) ஆனங்கூர் பிரிவு, அரசு மதுக்கடை பாரில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு போக வேண்டி, ஹோண்டா டியோ வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது நகர அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்ரமணி, யமஹா பேசினோ வாகனத்தில் வந்து வழிமறித்து, தகாத வார்த்தை பேசி, இடது கன்னத்தில் அறைந்து, அருண்குமார் வாகன சாவியை பிடுங்கிக்கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் கீழே தள்ளி, கல்லால் அடித்ததில், தலையில் காயம் ஏற்பட்டது. வழி தாங்காமல் சத்தம் போடவே, அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர். காயம் பட்ட அருண்குமாரை, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.