நாமக்கல் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு

நகராட்சியின் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-09 03:00 GMT

நாமக்கல் நகராட்சி சார்பில் நடைபெற்ற, தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார்.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது: நாமக்கல் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். தங்கள் வீட்டில் சேகரமாகும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நமது நகரை தூய்மையாக வைத்துக்கொள்வது நமது பொறுப்பு என்பதை அனைவரும் உனர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் அனைவரும் தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி சேர்மன் கலாநிதி, கவுன்சிலர்கள் டாக்டர்விஜய்ஆனந்த், கமலா, கிருஷ்ணலட்சுமி, சகுந்தலா, கமிஷனர் சுதா, பொறியாளர் சுகுமார், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் பழனிசாமி, சுப்பிரமணி மற்றும் வாக்கர்ஸ் கிளப் தலைவர் சுந்தரராஜன், செயலாளர் ராஜீ, உமாசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News