ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறப்பு விழா

ஒருவந்தூர் கிராமத்தில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாடு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-01-15 13:30 GMT

மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஒருவந்தூரில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாட்டு சிலை திறக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூரில் கிராம பஞ்சாயத்து சார்பில், முன்னாள் மோகனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணன் நினைவாக, ரூ.4 லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்றுடன் கூடிய காளை மாடு சிலை மற்றும் சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா, ஒருவந்தூர் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லராசாமணி தலைமையில் நடைபெற்றது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வக்கீல் பாலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பூங்காவை திறந்து வைத்தார்.

ஒருவந்தூர் பஞ்சாயத்து தலைவர் அருணா காளை மாட்டு சிலையை திறந்து வைத்தார். ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ருத்ராதேவி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News