நாமக்கல்லில் தேசிய அளவிலான லோக் அதாலத்: 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி மதிப்பில் தீர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

Update: 2022-06-26 13:00 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,890 வழக்குகள் ரூ.23.32 கோடி மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்கு உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில், இன்று நாமக்கல் மாவட்ட கோர்ட் வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. முதலாவது அமர்வில் நீதிபதிகள் சுந்தரையா, நந்தினி ஆகியோரும், இரண்டாவது அமர்வில் பாலகுமார், முருகன் ஆகியோரும், 3வது அமர்வில் கிருஷ்ணனன், மோகனபிரியா ஆகியோரும், 4வது அமர்வில் சேந்தமங்கலம் கோர்ட்டில் நீதிபதிகள் தமயந்தி, ஹரிஹரன் ஆகியோரும், திருச்செங்கோடு கோர்ட்டில் முதலாவது அமர்வில் நீதிபதிகள் சுரேஷ், தமிழரசி ஆகியோரும், இரண்டாவது அமர்வில் நீதிபதிகள் சக்திவேல், சரண்யா ஆகியோரும், ராசிபுரம் கோர்ட்டில் நீதிபதிகள் தீனதயாளன், சாந்தி, ரெஹானா பேகம் ஆகியோரும், பரமத்தி கோர்ட்டில் நீபதிகள் பிரபாகரன், சுப்ரமணி, விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுகள் மூலம் வழக்குகள் விசாரணை நடைபெற்றது.

நாமக்கல் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி குணசேகரன், முதன்மை மாவட்ட நீதிபதி வடிவேல், முதன்மை குற்றவியல் நீதிபதி விஜய்கார்த்திக் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த கோர்ட்டில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், பேங்க் செக் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் இன்று ஒரு நாளில் மொத்தம் 3,581 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள்பட்டது. 1,890 வழக்குகளுக்கு ரூ.23 கோடியே 32 லட்சத்து, 63 ஆயிரத்து 796 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

Tags:    

Similar News