கல்வி நிறுவன வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்

தனியார் கல்வி நிறுவன வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-18 02:15 GMT

நாமக்கல் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற, தனியார் கல்வி நிறுவனங்களுக்கான, ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்டிஓ முருகன் பேசினார்.

பள்ளி குழந்தைகளின் நலன்கருதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு கல்வி நிறுவனங்களின் பஸ்கள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆய்வு விரைவில் துவங்க உள்ளது. இதை முன்னிட்டு நாமக்கல் தெற்கு ஆர்டிஓ அலுவலகத்தில், தனியார் கல்வி நிறுவனங்களின் போக்குவரத்து பிரிவு பணியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆர்டிஓ முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது: புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி கல்வி நிறுவன வாகனங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பித்து சான்று பெற வேண்டும். அனைத்து கல்வி நிறுவன வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து விளக்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சரவணன், நேர்முக உதவியாளர் முருகன் மற்றும் தனியார் கல்வி நிறுவன போக்குவரத்து பிரிவு பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News