மோகனூரில் 18ம் தேதி குதிரைப் பந்தயம்: நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணியினர் ஏற்பாடு

நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வரும் 18ம் தேதி மோகனூரில் குதிரைப் பந்தயப் போட்டி நடைபெறுகிறது.

Update: 2022-01-15 12:30 GMT

பைல் படம்

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், வரும் 18ம் தேதி மோகனூரில் குதிரைப் பந்தயப் போட்டி நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மோகனூர் இளைஞரணி சார்பில், வரும் 18ம் தேதி மோகனூரில் நடைபெறும் குதிரைப்பந்தயப் போட்டிக்கு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நவலடி தலைமை வகிக்கிறார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி வரவேற்கிறார். எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ராஜ்யபா எம்.பி ராஜேஸ்குமார் போட்டியை துவக்கி வைக்கிறார். தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் போட்டியில் வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்குகிறார். பெரிய மற்றும் புதிய குதிரை என, இரண்டு பிரிவுகளில் போட்டி நடக்கிறது. அதில் பெரிய குதிரை பிரிவில் வெற்றி பெறும் முதல், மூன்று இடங்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், 20 ஆயிரம், 15 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

புதிய குதிரை பிரிவில், முதல் மூன்று இடங்களுக்கு, முறையே ரூ.20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுளை இளைஞரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News