மீன் வளர்ப்பில் உணவு மேலாண்மை: நாமக்கல்லில் இலவச பயிற்சி

நாமக்கல்லில், மீன் வளர்ப்பில் உணவு மேலாண்மை என்ற தலைப்பில் வருகிற 28ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

Update: 2021-12-22 11:15 GMT

பைல் படம்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளர்ப்பில் இயற்கை மற்றும் செயற்கை உணவு மற்றும் மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது. வருகிற 28ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்த பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் மீன் வளர்ப்பிற்கான பண்னை குட்டை அமைக்க இடம் தேர்வு செய்தல், மீன் குஞ்சுகள் தேர்வு, இருப்பு செய்தல், இயற்கை மற்றும் செயற்கை உணவு உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், இடுபொருட்கள் மற்றும் நீர்தர மேலாண்மை ஆகியவை உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் விரிவாக கற்றுத்தரப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொண்டு பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என்று மையத்தின் தலைவர் ஷர்மிளாபாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News