கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

Protest News - கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, காது கேளாதோர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-02 01:45 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, காது கேளாதோர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest News -நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு ஒரு சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும், தொகுப்பு வீடு வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News