ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை: கலெக்டர் உத்தரவு

Namakkal news- ஓட்டுகள் எண்ணும் மையம் அமைந்துள்ள, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி பகுதியில் டிரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

Update: 2024-04-29 09:30 GMT

Namakkal news- நாமக்கல் பராளுமன்ற தொகுதி ஓட்டுகள் எண்ணும் மையமான, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, எலக்ட்ரானிக் ஓட்டு மெசின்கள் பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Namakkal news, Namakkal news today- முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பராளுமன்ற தேர்தல் ஓட்டுகள் எண்ணும் மையம் அமைந்துள்ள, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி பகுதியில் டிரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் பராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலில், கடந்த 19ம் தேதி நடைபெற்ற ஓட்டுப்பதிவில், ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில், பயன்படுத்தப்பட்ட, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மெசின்கள், திருச்செங்கோடு அருகே, எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை மையத்தில், சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு மெசின் பாதுகாப்பு அறைகள் சீல் வைக்கப்பட்டு 4 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு மையம் இரவு பகல் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வாக்குப் பதிவு மெசின்கள் வைக்கப்பட்டுள்ள, கல்லூரியைச் சுற்றிலும், வருகிற ஜூன். 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News