பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில் அதிரடி

ராசிபுரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2024-04-29 15:00 GMT

பைல் படம்

ராசிபுரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, ராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அனைப்பாளையம் கிராமத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்த 2020- ஆண்டு, ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு சம்மந்தமாக சேலத்தான் (எ) வருதராஜ் (59) மற்றும் சங்கர் (எ) சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று 29ம் தேதி வழக்கின் விசாரணை முடிவடைந்து, நாமக்கல் மகிளா கோர்ட் நீதிபதி முனுசாமி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், பாலியல் சம்மந்தமான வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சேலத்தான் (எ) வருதராஜ் மற்றும் சங்கர் (எ) சிவா ஆகியோருக்கு தலா 40 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்குண்ணன் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News