நாமக்கல் மாவட்டத்தில் நாளை 442 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 442 மையங்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-24 11:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 10 முறை கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 11ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை 25ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் தடுப்பூசி செலுத்தப்படும். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் 88 முகாம்களும், 19 டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 68 முகாம்களும், 322 கிராமப் பஞ்சாயத்துக்களில் 290 மையங்களும் என மெத்தம் 442 சிறப்பு முகாம்களில், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவனை செலுத்தப்படும். 18வயதுக்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News