நாமக்கல்புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டுவர பாஜக கோரிக்கை

Govt Medical College -நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் பாஜக மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-09-20 03:30 GMT

பைல் படம்.


Govt Medical College - நாமக்கல், செப்.20-

நாமக்கல் புதிய அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் பாஜக மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவு துணைத்தலைவர் லோகேந்திரன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, நாமக்கல் கலெக்டர் ஸ்யோசிங் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் அருகில் புதியதாக துவக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கடந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஆஸ்பத்திரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் நாமக்கல் பகுதியில் விபத்தில் காயம் ஏற்படுவர்களும், பல்வேறு நோய்களால் பாதிகப்பட்டவர்களும் உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. சேலம் செல்ல சுமார் 1 மணிநேரம் ஆகிறது. இதனால் சில நாயாளிகளை உயிர் காப்பாற்ற முடிவதில்லை.

எனவே மத்திய, மாநில அரசுகள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வளாத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு உடனடியாக குடிநீர் வசதி, மின்சாõர வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தேவையான டாக்டர்களை நியமிக்க வேண்டும். மேலும் உயர் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரனங்களை நிறுவி விரைவில் இந்த ஆஸ்பத்திரியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News