நாமக்கல்லில் மீண்டும் வேகமெடுக்கும்தக்காளி விலை: ஒரு கிலோ ரூ.110

தொடர்மழை எதிரொலியால் நாமக்கல் பகுதியில் தக்காளி விலை மீண்டும் வேகமெடுத்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.110 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2021-12-04 05:45 GMT

பைல் படம்.

தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. தக்காளி அதிகமாக விளையும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ததால் தக்காளி செடிகள் அழுகியது. இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரம் முன்பு தக்காளி விலை ரூ.100 தாண்டியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அனைத்து சமூக வலைதளத்திலும் தக்காளி சம்மந்தமான மீம்ஸ்கள் பகிரப்பட்டன. பின்னர் மழை ஓரளவு குறைந்ததாலும், வெளி மாநில தக்காளி வரத்தாலும் கடந்த வாரம் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது.

இந்த நிலையில் மீண்டும் தொடர்மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தக்காளி வரத்து மிகவும் குறைந்துள்ளது இன்று நாமக்கல் பகுதியில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.110 ஆக விற்பனை செய்யப்பட்டது.

வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.100, கத்தரிக்காயம் ரூ.80, புடலங்காய் ரூ.60, பீர்க்கங்காய் 70, முட்டைகோஸ் ரூ.60, பச்சைப்பட்டானி ரூ.300 என அனைத்து காய்கறிகளும் கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News