முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் : நலத்திட்ட உதவி வழங்கல்

Former Chief Minister Karunanidhis Birthday

Update: 2022-06-24 10:15 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பயனாளிகளுக்கு தையல் மிஷின் வழங்கி எம்.எல்.ஏ.

மதுரை  வடக்கு மாவட்டம் திமுக சார்பாக பாலமேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் தலைமை  வகித்தார்.

ஒன்றியச் செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. பொறுப்பாளர் பாலகிருஷ்ணன். அலங்காநல்லூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

மதுரை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளரும், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி ஏ வெங்கடேசன். எம். எல்.ஏ. சிறப்புரையாற்றினார். அதனை த்தொடர்ந்து, தலைமைக் கழக பேச்சாளர் மதுரை சுந்தர்ராஜன், மாவட்ட அவை தலைவர் பாலமேடு பாலசுப்ரமணியன். ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ,மாவட்ட துணைச் செயலாளர் விஜயலட்சுமி முத்தையன் , மாவட்டப்பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பஞ்சு அழகு, பாலமேடு பேரூராட்சித் தலைவர் சுமதி பாண்டியராஜன், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலமேடு பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.கே.மனோகரவேல்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார் .முடிவில், செல்வம் சந்திரய்யா நன்றி கூறினர்.

Tags:    

Similar News