அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார்.;
அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பொதுமக்களுக்க பழரசம் வழங்கினார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான உதயகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளரிப்பிஞ்சு, தண்ணீர்பழம், சர்பத், இளநீர், உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, நகர இணை செயலாளர் புலியம்மாள், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன் வார்டு செயலாளர்கள் வெள்ளைகிருஷ்ணன், கேபிள்பாஸ்கரன், சுந்தர் ராகவன், வலசை கார்த்திக், கணேசன், ஆறுமுகம் பிரதிநிதி கேட்டுகடை முரளி, பாண்டிசெல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் பெரியஊர்சேரி கிளைச் செயலாளர் முத்துராம், எம்ஜிஆர் இளைஞர் அணி செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, புதுப்பட்டி பாண்டுரங்கன், முத்துகுமார், கல்லணைமனோகரன், மற்றும் ஹரிஅய்யன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.