சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்

மதுரை பாண்டிய மன்னரால் உருவாக்கப்பட்டு நாயக்கர் மன்னரால் குடமுழுக்கு நடத்தப்பட்ட கொடிமங்கலம் குமரன் கோவில் பாலாலயம் நடைபெற்றது.

Update: 2024-04-27 07:11 GMT

கொடிமங்கலம் குமரன் கோவில் பாலாலயம் நடைபெற்றது.

2500 ஆண்டுகளுக்கு முன், மதுரை பாண்டிய மன்னரால் உருவாக்கப்பட்டு நாயக்கர் மன்னரால் குடமுழுக்கு நடத்தப்பட்ட கொடிமங்கலம் குமரன் கோவில் பாலாலயம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கொடிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதாய குமார சுப்ரமணியசாமி திருக்கோவில் பாலாலய விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, இன்று காலை 7 மணி முதல் சிறப்பு யாகம் நடைபெற்றது .

காலை 7 மணிக்கு மங்கள இசை குமர கடவுளிடம் அனுமதி பெறுதல் விநாயகர் வழிபாடு மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, மூலமந்திரம் மற்றும் பூர்ணாஹுதியுடன் தீபாரதனை நடைபெற்றது.

கோவிலை சுற்றி கலசங்கள் வலம் வந்தது அதனைத் தொடர்ந்து காலை 10:20 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் மயூர விமான பாலாலயம் நடைபெற்றது. ஆலய அர்ச்சகர் மகேஷ் வாத்தியார் , பழனி பால தண்டாயுதபாணி குருக்கள் ராஜா சண்முகம், பழனி ஸ்தபதி விசுவமூர்த்தி ஆகியோர் யாகவேள்வி நடத்தினர். பாலாலய ஏற்பாடுகளை, கொடிமங்கலம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News