விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி சக்தி மாரியம்மன் திருவிழாவில் முளைப்பாரி

விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி சக்தி மாரியம்மன் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

Update: 2024-04-24 03:45 GMT

விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி சக்தி மாரியம்மன் விழாவில் கரகம் எடுத்து வரப்பட்டது.

விக்கிரமங்கலம் அருகே எம்.கீழப்பட்டி சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் சித்திரை மாதம் கோவில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் அம்மன் கோவில்களில் திருவிழா நடத்தப்படுவது உண்டு. சில பெரிய கோவில்களில் தேரோட்டமும் நடப்பதால் அந்த  கோவில்கள் களை கட்டி காணப்படும். இந்து ஆண்டு கோவில் விழாக்களுக்கு நிகராக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே, முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை பால்குடம் எடுத்து பக்தர்கள் காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றது. இரவு சக்தி கரகம் எடுத்தல் தீச்சட்டி எடுத்தல் மற்றும் ஆயிரம் கண் பானை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மி பாட்டு பாடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

நேற்று இரவு மதுரை ராஜேஸ்வரி குழுவினரின் கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இன்று காலை பொங்கல் வைத்து சக்தி கிடா வெட்டுதல் நடைபெற்று சக்தி கரகம் முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை, கீழப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News