மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா

மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2024-04-28 09:20 GMT

மதுரை அண்ணாநகர் ,வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில், சங்கடகர சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு அவங்காரத்தில் விநாயக பெருமான்.

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு  மதுரையில் உள்ள கோயில்களில் , விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

சங்கடஹரசதுர்த்தியையொட்டி மதுரை அண்ணா நகர், வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. முன்னதாக, விநாயகர் சன்னதி முன்பாக கணபதி ஹோமங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பிரசாத வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல, மதுரை தாசில்தார் நகர், சித்தி விநாயகர் ஆலயத்திலும், வரசித்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்திலும், விநாயகருக்கு, பால், தயிர் போன்ற சிறப்பு விஷயங்கள் செய்யப்பட்டு, அலங்கார் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அர்ச்சனை செய்து தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விநாயகப் பெருமானை வழிபட்டனர். இதே போல, மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன், ஞான சித்தி விநாயகர், செல்வ விநாயகர் ஆலயத்திலும், மதுரை அருகே கருப்பாயூரணி விநாயகர் ஆலயத்திலும் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகங்கள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விநாயகருக்கு கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர் பலர் எருக்கம் பூ மாலை அணிவித்து விநாயகரை, வேண்டிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News