மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்
மதுரை மக்களிடம் இருந்து விடைபெற்று பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டு சென்றார் கள்ளழகர்.
சித்திரை திருவிழா முடிந்து மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் அழகுமலைக்கு கள்ளழகர் புறப்பட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. சித்தரை திருவிழாவை முன்னிட்ட மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த 21 ம்தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 23ந்தேதி கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தருக்கு காட்சியளித்தார். அதை அடுத்து, மண்டுக ரிஷிக்கு சாப விமோச்சனம் கொடுத்தல், மற்றும் அண்ணா நகர், வண்டியூர், யாகப்ப நகர், மற்றும் மதிச்சியம், சாத்தமங்கலம், சிவகங்கை சாலை ஆகிய பகுதிகளில் திருக்கண் மண்டகப் படியில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும், கள்ளழகர் ராமராய மண்டபடியில் தசாவதார நிகழ்ச்சி, விடிய, விடிய நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, கள்ளழகர் ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில், பூப்பல்லக்கில் அலங்காரமாகி இன்று காலை 3 மணி அளவில் மதுரை தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டு, புதூர், சூர்யா நகர், வழியாக பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்து பிரசாதம், நீர் மோர், பானகம், ஆகியவற்றை பக்தர்களுக்கு வழங்கினர். மதுரை மக்கள் நிர்வாகி முத்துராமன், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினார். கள்ளழகர் மதுரை மக்களிடம் இருந்து விடை பெற்று கொண்டு, கள்ளழகர் மதுரை அழகர் மலையை நோக்கி புறப்பட்டுச் சென்றார் .
இன்று இரவு அப்பன் திருப்பதியில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை அதிகாலை புறப்பட்டு, 11 மணி அளவில் மணியளவில் கோயிலை சென்று அடைவார் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் துணை ஆணையர் லெ. கலைவாணன், கண்காணிப்பாளர் அருள் செல்வன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.