கரூரில் வீட்டுமனை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-16 09:30 GMT

ஆட்சியர் அலுவலகம் முன்பு  வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

கரூரில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் குடியிருக்க வீட்டுமனைப் பட்டா, பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பிரிவின் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், குடியிருக்க வீடு இல்லாத ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Tags:    

Similar News