கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட பள்ளிகள் ஆர்வமுடன் மாணவிகள் வந்தனர்.

Update: 2022-02-01 16:06 GMT

ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவிகள்.

கொரனோ மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த பள்ளிகளுக்கு முதல் கட்டமாக ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அதன் பிறகு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு திறக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி முதல் பள்ளிக்கு மாணவிகள் வருகை புரிந்தன. பள்ளிக்கு வந்தவர்களை ஒன்றன் பின் ஒன்றாக வரவழைத்து அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் கொடுத்து வகுப்பறைக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1060 பள்ளிகள் உள்ளன. இதில் 1,60,000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

Tags:    

Similar News