'நான் வங்கி அதிகாரி' என கூறி ரூ.32,000 அபேஸ்

வங்கி அதிகாரி என்று கூறி ஏ.டி .எம் ரகசிய நம்பரை பெற்று மர்ம கும்பல் பணம் அபேஸ் செய்தது.

Update: 2021-04-13 10:13 GMT

கரூரில் வங்கி அதிகாரி என கூறி 32,000 ரூபாயை ஏடிஎம் கார்டு மூலம் ஏமாற்றி விட்டதாக கரூரில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் வாங்கல் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், வங்கி ஏடிஎம் கார்டு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு நாகராஜனின் இரண்டு ஏடிஎம் கார்டு ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டுள்ளனர். வாங்கி அதிகாரிகள் என்று நினைத்த நாகராஜன் அவர்களிடம் ரகசிய நம்பரை கூறினார். 

இப்படி, இரண்டு ஏடிஎம் கார்டு ரகசிய குறியீட்டை பெற்று அவரது கணக்கில் இருந்து ரூ.32,000 ஆயிரம் ரூபாயை  அபகரித்து விட்டனர். பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தபோதுதான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனே வாங்கல் போலீசில் நாகராஜன் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், வாங்கல்  போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News