வாசிப்பை வலியுறுத்தி கரூர் டூ காஷ்மீர் சைக்கிள் பயணம்

கரூரைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் புத்தக வாசிப்பை வலியுறுத்தி கரூர் முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

Update: 2021-09-02 11:45 GMT

கரூரிலிருந்து காஷ்மீர் வரை சைக்கிள் பயணத்தை தொடங்கிய யோகேஸ்வரன்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். புகைப்பட கலைஞராக பணி செய்து வருகிறார். சிறுவயதிலிருந்து புத்தக வாசிப்பின் மீது இவருக்கு அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் இறையன்பு எழுதிய "பத்தாயிரம் மைல் பயணம்" என்ற புத்தகத்தில் இடம்பெற்ற "ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து இருக்க வேண்டும்" என்ற சீனப் பழமொழி இவருக்கு உத்வேகத்தை தந்துள்ளது.

இதனையடுத்து புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காக, கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு அமைந்துள்ள தமிழ் சங்க காலப் புலவர்கள் நினைவுத்தூண் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து, காஷ்மீர் மாநிலம் லடாக் வரை 11 மாநிலங்களை கடந்து 12,000 கிலோ மீட்டர் சுமார் நான்கு மாத காலம் சைக்கிள் பயணத்தை இன்று தொடங்கினார்.

இந்த சைக்கிள் பயணத்தில் இடையிடையே ஒவ்வொரு பகுதியிலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சந்தித்து கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பயணத்தில் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்த உள்ளார்.

Tags:    

Similar News