சமையல் எரிவாயு விலை உயர்வு : உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்

கரூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-20 14:15 GMT

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கரூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  பெண்கள். 

கரூர் பேருந்து நிலையம் அருகில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட இணை அமைப்பாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பெண்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சாதாரண உழைக்கும் மகளிர் வருவாய் பெருமளவில் செலவாகிறது என்று முழக்கம் எழுப்பினர். கார்ப்பரேட் முதலாளிகளின் கடனை எல்லாம் தள்ளுபடி செய்து ஏழைகளை மத்திய அரசு கடனாளியாக ஆக்குவதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Tags:    

Similar News