அரசு மருத்துவமனைக்கு பச்சையப்பாஸ் குழுமம் சார்பில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம் பிரபல பட்டு ஜவுளி நிறுவனமான பச்சையப்பாஸ் சார்பில் 25 லட்ச மதிப்பில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலையில் அரசு மருத்துவமனையிடம் அந்நிறுவன தலைவர் சுந்தர் கணேஷ் வழங்கினார்.

Update: 2021-06-30 11:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பச்சையப்பாஸ் ஜவுளி நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரணமாக ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் 1926ஆம் ஆண்டு பச்சையப்பாஸ் என்ற பெயரில் சிறிய பட்டுச் சேலை உற்பத்தி மற்றும் விற்பனை இயக்கமாக துவங்கப்பட்டது.

.தற்போது சென்னை , வேலூர் என பல்வேறு கிளைகளுடன் சிறப்பாக பட்டுக்கு என்று தனி இடத்தை உருவாக்கி உள்ளது பச்சையப்பாஸ் நிறுவனம்.

இந்நிறுவனம் 95 ஆண்டுகளாக சிறப்புடன் விளங்கி வரும் நிலையில் பல்வேறு சமூக தொண்டு களையும் அவ்வப்போது செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 15 லட்சம் மதிப்பிலான அவசர ஊர்தி மற்றும் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் , 5 லட்சம் மதிப்பிலான அலுவலக தளவாட பொருட்கள் வழங்க முடிவு செய்தது.

இப்பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்வு அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ இணை இயக்குனர் ஜீவா முன்னிலையில் நடைபெற்றது.

பச்சையப்பாஸ் குழும தலைவர் சுந்தர் கணேஷ் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலையில் மருத்துவமனையிடம்  ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில் பச்சையப்பாஸ் குழும இயக்குனர்கள் எஸ் வசந்தராஜ் , எஸ். முகேஷ் ராஜ் , பி .ஜெகன்ராஜ் மற்றும்  விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News