காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம் ஆலடிபிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

Update: 2024-05-06 10:45 GMT

காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் அரசு வேம்பு விருட்சங்களின் சிவ பார்வதி திருக்கல்யாண விழாவினை யொட்டி சிறப்பு யாகம். நடைபெற்ற போது

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் ஆலடி பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் செங்குந்தர் சமுதாய குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் அருள்மிகு ஆகாய கன்னி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் உலக நன்மை கருதியும் , குடும்ப நன்மைக்காகவும், இல்லத்தில் செல்வம் பெருக வேண்டியும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழவும், இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களின் குடிகொள்ளவும் மகாலட்சுமி பரிபூரண அருள் கிடைக்க வேண்டி, இன்று காலை சிறப்பு 108 பால்குடப் புறப்பாடு அருகில் உள்ள பனாமுண்டீஸ்வரர் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆகாய கன்னியம்மன் ஆலயத்தின் எதிரில் அமைந்துள்ள அரசு வேம்பு விருட்சங்களின் சிவப் பார்வதி திருக்கல்யாண நிகழ்வு ஆலய அர்ச்சகர் சதீஷ்குமார் சிவாச்சாரியாரால் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண சங்கல்பம் , பஞ்சகவ்ய அபிஷேகம் , சிறப்பு ஹோமம் , அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண மாங்கல்ய தாரணம் மற்றும் மாலை மாற்றுதல் என அனைத்தும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள், குங்குமப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ பால தர்மசாஸ்தா ஆலய அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டனர்.

மாலை வண்ண மலர்கள் அலங்காரத்தில் ஸ்ரீ கன்னியம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.

Tags:    

Similar News