காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2024-05-06 10:45 GMT

முதன்மை கல்வி அலுவலகம் . காஞ்சிபுரம் 

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் அனைத்தும் முடிந்தும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று அதன் நிறைவுக்கு பின்பு மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இன்று காலை தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பாக மார்ச் 2024 இல் நடைப்பெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 92.28% சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மார்ச் 2024 இல் நடைப்பெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 5680 மாணவர்களும், 6733 மாணவிகளும் என மொத்தம் 12413 மாணவ, மாணவிகள் அரசுத் தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் 11455 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள். சராசரியாக 92.28% சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 89.08 சதவீதமும், மாணவிகள் 94.98 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 1.46% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள், மாணவர்களை விட 5.9 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளின் 2554 மாணவர்களும் , 388 மாணவிகளும் என மொத்தம் 642 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 2123 மாணவர்களும், 3597 மாணவிகள் என மொத்தம் 5720 மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

மாணவர்கள் 83 சதவீதமும் மாணவிகள் 92 சதவீதமும் என மொத்தம் சராசரியாக 89 சதவீத பேர் அரசு பள்ளியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.32% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 33வது தர வரிசையினை பெற்றுள்ளது.

Tags:    

Similar News