தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள் கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil

முட்டையின் நன்மைகளை இத்தொகுப்பில் பார்க்கலாம்.உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள் தரும்.| Egg benefits in tamil

Update: 2024-11-25 12:00 GMT

முட்டை(Egg) என்பது பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக(Egg) இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்று முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.பெரும்பாலும் கோழி முட்டை(Egg) தான் மக்கள் விரும்பி சாப்பிடுவர்.உடலுக்கும் நல்லது.

இதய நோய் பாதிப்புகள் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இல்லாவிட்டால் தினசரி முட்டை(Egg) சாப்பிடலாம். அதே சமயம், அவரவர் உடல் தேவையைப் பொருத்து ஒன்று அல்லது இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

முட்டை(Egg) சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நல்லது. டெய்லி ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வீடுகளில் பெரும்பாலும் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே முட்டை சமைக்கப்படும். ஆக, நாம் எடுத்துக் கொள்ளும் முட்டையின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். அதே சமயம், தினசரி வெளியே ஹோட்டல்களில் சாப்பிடும் பெரும்பாலான நபர்கள் தினசரி முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக, பேச்சிலர்களின் மதிய உணவு மற்றும் இரவு உணவு வேளைகளில் ஆம்லெட் அல்லது ஆஃப் பாயில் இல்லாமல் சாப்பாடு முழுமை அடையாது. இப்படி தினசரி முட்டை (Egg) சாப்பிடுவது நல்லதா, கெட்டதா, உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்Egg Benefits In Tamil என்பதை வாங்க பார்க்கலாம் .

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Egg Benefits In Tamil

1. உடலுக்கு தேவையான விட்டமின் பி2, விட்டமின் பி12, விட்டமின் டி, செலீனியம், ஐயோடின், ஃபோலேட் மற்றும் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியது முட்டைகள்.

2. காலை உணவில் முட்டை(Egg) எடுத்துக் கொண்டால், அன்றைய நாளில் உங்கள் உடலுக்கு தேவையான எனர்ஜி முழுமையாக கிடைக்கும். குறிப்பாக, நீண்ட நேரம் பணி செய்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். முட்டைகள் எப்போதும் ஆற்றலை மெல்ல, மெல்ல ரிலீஸ் செய்யும். இதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை செரிமானத்தை தாமதப்படுத்தும். ஆக, பசியின்றி நீண்ட நேரம் பணி செய்யலாம்.

3. பல்வேறு வகையான நோய்களை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்க முட்டைகள்(Egg) வழிவகை செய்யும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, இதில் உள்ள செலனீயம் என்ற சத்து இம்யூன் பூஸ்டராக செயல்படுகிறது.

4. மூளை செயல்பாட்டுக்கு அத்தியாவசியமாக உள்ள கோலின் என்ற சத்து முட்டையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் முட்டையில்(Egg) 100 முதல் 500 மில்லி கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. கோலின் மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் ஆகிய இரண்டுமே மூளை செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியதாகும்.

5. முட்டையில் (Egg) உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது இதய நோய் அபாயங்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் உள்ளுறுப்புகள் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்.

6. முட்டையின் மஞ்சள் கருவில், உடலுக்கு கெடுதலை ஏற்படுத்தும் எல்டிஎல் கொழுப்பு இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இது உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு ஆகும். உடலுக்கு நன்மை பயக்கு ஹெச்டிஎல் கொழுப்பு முட்டையில்(Egg)  இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

7. உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் முட்டையில்(Egg)  இருந்து கிடைத்து விடுவதால், மாவுச்சத்து உணவுகளை நீங்கள் பெரிதும் குறைத்துக் கொள்ளலாம். மேலும், முட்டை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு எளிதில் கிடைக்கும். இதனால், மற்ற உணவு அளவுகள் குறையும் என்ற நிலையில், எடையை குறைக்க  Egg Helps In Weight Loss இது உதவும். 

Tags:    

Similar News