தினமும் ஊறுகாய் சாப்பிடுவதால் நாவிற்கு சுவைத்தான்...! ஆனால் உங்க உடம்புல என்னென்ன நடக்கும் தெரியுமா...?

ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் , விளைவுகளையும் இத்தொகுப்பில் காணலாம். | Urugai side effects in tamil;

Update: 2024-11-25 11:41 GMT

தக்காளி, முள்ளங்கி, பச்சை மிளகாய், கேரட் உள்பட பல்வேறு காய்கறிகளைப் பயன்படுத்தியும் ஊறுகாய் செய்கின்றனர். அதேபோல் மீன், ஆட்டிறைச்சி, கோழி போன்ற அசைவ உணவுகளைப் பயன்படுத்தியும் ஊறுகாய் சாப்பிடுகின்றனர்.தமிழகத்திலும் பரவலாக மாங்காய், பூண்டு, எலுமிச்சைப் பழத்தை வைத்து ஊறுகாய் செய்து சாப்பிடும் பழக்கம் உள்ளது.

ஊறுகாய் (Urugai) என்பது உப்புநீரில் காற்றில்லா நொதித்தல் அல்லது வினிகரில் மூழ்குவதன் மூலம் உணவின் அடுக்கு ஆயுளைப் பாதுகாப்பது அல்லது நீட்டிப்பது ஆகும்.ஊறுகாய் கரைசல்கள் பொதுவாக அதிக அமிலத்தன்மை கொண்டவை, pH 4.6 அல்லது அதற்கும் குறைவானது மற்றும் அதிக உப்பு நொதிகள் வேலை செய்வதைத் தடுக்கிறது மற்றும் நுண்ணுயிரிகள் பெருகுவதைத் தடுக்கிறது. ஊறுகாய் அழிந்துபோகக்கூடிய உணவுகளை மாதங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் வருடங்கள் வரை பாதுகாக்கலாம் .

ஊறுகாய் (Urugai) சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். 

ஊறுகாய் சாப்பிடுவதால் வரும் விளைவுகள் | Urugai Side Effects In Tamil

1.செரிமான பிரச்சனைகள்:

ஊறுகாயை  தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

2.அல்சர் | Urugai Affected Ulcer

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை (Urugai) அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.

3.இதய நோய்| Urugai Affected Heart

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

4.வயிறு உப்புசம் | Urugai Affected After Digestion

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

5. உப்பு அதிகமாக இருப்பதால்:

அதிக அதில் உள்ளதால் இரத்த அழுத்தம் (Hypertension) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.நீரிழிவு அல்லது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.

6.நீரிழிவு நோயாளர்களுக்கு பாதிப்பு | Urugai Affected Diabetes

சர்க்கரை சேர்க்கப்பட்ட ஊறுகாய் வகைகள், நீரிழிவு நோயாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். .இதனால் தொண்டை சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

 முன்னெச்சரிக்கைகள்:

1. அளவு கட்டுப்பாடு - மிக மிகக் குறைவாக மட்டும் ஊறுகாய் (Urugai) உட்கொள்வது நல்லது.

2.குடிநீர் _ ஊறுகாய் சாப்பிடும்போது நன்றாக குடிநீர் அருந்துவது அவசியம்.

3.ஊறுகாய் தயாரித்தல் - வீட்டிலேயே ஊறுகாய் தயாரித்து ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்தி சாப்பிடுவது பாதுகாப்பானது.

4. அதிகமசாலா தவிர்க்கவும் _ மிக அதிக காரமும் மசாலாவும் கொண்ட ஊறுகாய் வகைகளை தவிர்க்கவும்.

Tags:    

Similar News