அச்சச்சோ..! இந்த பிரச்சனை இருக்கவங்களாம் ஹேர் ஆயில் யூஸ் பண்ண கூடாதா!யாரெல்லாம் தெரியுமா? | Who should not use hair oil in tamil
தலைக்கு எண்ணெய் தடவினால் முடி நன்றாக வளரும் என்பது முழுமையான உண்மையல்ல. இருப்பினும், தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.யாரெல்லாம் முடிக்கு எண்ணெய் பயன்படுத்தலாம்?பயன்படுத்தக்கூடாது? என்பது பற்றி பார்ப்போம்.;
தற்போது முடி உதிர்வு என்பது பெண்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பெண்கள் சிலர் முடியை நீளமாக விரும்புவர். ஆனால்,ஒரு சிலர் முடியை அழகுபடுத்துவதாக நினைத்து முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்து கொள்கின்றன. இதனால், முடி உடைந்து அதிக முடிகள் கொட்ட வாய்ப்புள்ளது.முடி உதிர்வதற்கும், மீண்டும் வளருவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆனால் சிலர், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், (Who should not use hair oil in tamil) புதிய முடி வளரவும் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.
எண்ணெயில் ஃபேட்டி ஆசிட்ஸ்,ஆன்டி-ஆக்சிடன்ட், வைட்டமின் ஆகியவை உள்ளன. எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
நாம் உண்ணும் தவறான உணவு உட்பட பல காரணங்களால் இது ஏற்படலாம். இது தவிர காற்று மாசுபாடு, மன அழுத்தம், தைராய்டு, ஹார்மோன் மாறுபாடு மற்றும் சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என அனைத்தும் முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். ஆனால் முடிக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதன் மூலமாக அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என நினைக்கிறோம். கூந்தலை பராமரிப்பதற்காக வாரந்தோறும் தவறாமல் எண்ணெய் குளியல் செய்பவர்களும் உண்டு.
தலைக்கு எண்ணெய் தடவினால் முடி நன்றாக வளரும் என்பது முழுமையான உண்மையல்ல. இருப்பினும், தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.யாரெல்லாம் முடிக்கு எண்ணெய் பயன்படுத்தலாம்?பயன்படுத்தக்கூடாது? (Who should not use hair oil in tamil) என்பது பற்றி பார்ப்போம்.
எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் | Hair oil benefits in tamil
1. சூரிய ஒளியில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் உடலில் கால்சியம் குறைபாட்டைக் குணப்படுத்தும். நரம்பு மண்டலம் மற்றும் தசைக்கூட்டு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும். இது மட்டுமின்றி, சருமத்தின் நுண்ணுயிரிகளுக்கு ஊட்டமளித்து, இரத்த ஓட்டத்தை சிறப்பாக பராமரிக்கவும் உதவுகிறது.
2. தலையில் எண்ணெய் தடவுவதால் (Hair oil benefits in tamil) உச்சந்தலை வறண்டு போகாமல் இருப்பது. ஏனெனில் வறண்ட கூந்தல் உடைந்து நரைக்கும் வாய்ப்புள்ளது.
3. வறண்ட கூந்தல் இருந்தால், தினமும் சிறிது எண்ணெயை கண்டிஷனர் போல தடவலாம். பொதுவாக தினசரி எண்ணெய் தேய்ப்பது அவசியமில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.
யார் எல்லாம் தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது? | Who should not use hair oil in tamil
சிலருக்கு இயற்கையாகவே தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெய் (Effects of oil in hair in tamil) வெளியாகும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தலைக்கு தினந்தோறும் எண்ணெய் தேய்க்கக்கூடாது.
அதேபோல் பொடுகு பிரச்சனை (causes of dandruff in tamil) இருப்பவர்களும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது. ஏனெனில் எண்ணெய் காரணமாக பொடுகுத் துகள்கள் உச்சந்தலையிலும் முடியிலும் ஒட்டிக்கொள்கின்றன. எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில், பொடுகு குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கலாம். எண்ணெய், இறந்த சரும செல்கள் சேர்ந்து, உச்சந்தலையில் அழுக்கு மற்றும் அரிப்பு ஏற்படுத்தும்.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் ஆயில் மசாஜ் செய்து தலைக்கு குளிப்பது நல்லது. தோல் மருந்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பு மற்றும் கன்டிஷனர்கள் அல்லது இயற்கையான மூலிகை பொருட்களை பயன்படுத்துவது கூடுதல் பலனளிக்கக்கூடும்.