முகத்தை இளமையாக வைக்க முருங்கை பொடி!..இத பத்தி தெரிஞ்சுக்காம இருந்துட்டோமே..|Moringa powder benefits for skin in tamil

முருங்கை பொடி முகத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைப்பதோடு மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. இவை எப்படி சரும அழகை மேம்படுத்த உதவுகிறது என்பதையும் இதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் இங்கு தெரிந்துகொள்வோம்.

Update: 2024-11-23 14:30 GMT

முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு நன்மைகள் தரக்கூடியதுதான்.முக்கியமாக, முருங்கை (Moringa powder benefits for skin in tamil) இலையிலும்,முருங்கை பூவிலும் பல சத்துக்கள் நிறைந்து உள்ளன.முருங்கை இலையை சாப்பிடுவதால் உடம்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.மேலும்,உடம்புக்கும் மிகவும் நல்லது.அதே போல் தான் முருங்கை பொடியும்,இதை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தை ஈர்ப்பத்துடனும்,பொலிவுடனும் வைத்து கொள்கிறது.

முருங்கை பொடி, தமிழர்களின் பாரம்பரிய வீட்டு மருத்துவத்தில் முக்கிய இடம் பிடிக்கும் ஒரு பொருள். இது இயற்கையாகவே பல சத்துக்கள் நிறைந்தது. முகத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைப்பதோடு மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.

முருங்கை மரம் (Moringa powder benefits for skin in tamil) முழுவதுமே அற்புதமான ஆற்றல் கொண்டது. இதன் பட்டை, வேர், பூ, காய், இலை என எல்லாமே மருத்துவ குணங்கள் அடங்கியது. மேலும் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது சரும நச்சை நீக்கி சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கொலாஜன் மேம்படுத்த உதவும். மேலும் சரும அழற்சியை சரி செய்ய உதவும்.

இயற்கையான தோல் பராமரிப்பை விரும்பினால் முருங்கை இலையை முகத்துக்கு பயன்படுத்தலாம். உடலுக்கு அற்புத சக்தியை அளிக்கும் இந்த முருங்கை இலை பொடி சருமத்துக்கும் அற்புதமான நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஏஜிங் பண்புகள் சருமத்தை இளமையாக வைக்க உதவும். இவை எப்படி சரும அழகை மேம்படுத்த உதவுகிறது என்பதையும் இதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் இங்கு தெரிந்துகொள்வோம்.

முருங்கை இலை ஏன் சருமத்துக்கு நல்லது? | Moringa powder benefits for face in tamil

முருங்கை இலை வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது. இவை எல்லாமே சருமத்துக்கு நன்மை செய்யக்கூடியது. இதன் உயர் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட செய்கிறது இதனால் சருமத்தில் வயதான அறிகுறிகளை குறைக்கிறது. வைட்டமின் ஈ சருமத்தை ஈரப்பதமாக வைக்க செய்கிறது. இதன் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சரும பிரச்சனைகளை எதிர்க்க செய்கிறது.

சருமத்துக்கு நீரேற்றம் அளிக்க உதவும் முருங்கை தூள்

முருங்கையில் இருக்கும் ஒமேகா உள்ளடக்கம் சருமத்துக்கு மாய்சுரைசராக செயல்படுகிறது. இது இனிமையான மற்றும் மென்மையான பண்புகளை கொண்டது. முருங்கை நாள் முழுவதும் சருமத்தை மென்மையாக நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்ய உதவும்.

சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை குறைக்க முருங்கை பொடி

​முருங்கை தோல் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இந்த வைட்டமின் சருமத்தை குணப்படுத்தும். சருமத்தில் இருக்கும் முகப்பரு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதோடு முகத்தை அழகாக வைக்க செய்கிறது.

சருமத்தில் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை குறைக்க முருங்கை தூள்

வயதாகும் போது உடல் கொலாஜன் உற்பத்தியை மெதுவாக்குகிறது. ஆனால் முன்கூட்டியே வயதாவதை உண்டு செய்வதை தடுக்க கொலாஜன் உற்பத்தியை நிர்வகிக்கிறது முருங்கை. இதனால் சருமத்தை சுருக்கமில்லாமல் வைத்திருக்க முடியும். அதற்கு முருங்கை இலையில் (Moringa powder) இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. முருங்கை கொலாஜன் உற்பத்தியை தூண்டி வயதான அறிகுறிகளை குறைக்கிறது. தோல் செல்களை சரி செய்கிறது.

முருங்கை இலை பொடி சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும்

தோல் பொலிவு அடைய முருங்கை இலை பொடி (Murungai podi benefits in tamil) உதவும். முருங்கையில் இருக்கும் வைட்டமின் சி கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தின் நிறத்தை சமன் செய்கிறது. இதனால் பொலிவான நிறத்தை இயற்கையாகவே பெறமுடியும். முருங்கையின் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்கள், வெடிப்புகள் மற்று பிற தோல் கறைகளை குறைக்க உதவுகின்றன.

முருங்கை பொடியின் அற்புத நன்மைகள் | Murungai podi benefits in tamil

1. தோல் நோய்கள்: தோல் அழற்சி, சொரி, சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

2. முடி வளர்ச்சி: முருங்கை பொடி முடியை வலுவாக வைத்து, முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

3. உடல் எடை குறைப்பு: முருங்கை பொடி செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

4. நோய் எதிர்ப்பு சக்தி: இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள், நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

முருங்கை பொடியை எப்படி பயன்படுத்துவது? | How to use moringa powder for skin whitening

முகப்பாகம்: முருங்கை பொடியை தயிர் அல்லது தேனுடன் கலந்து முகத்தில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

தலைமுடி: முருங்கை பொடியை தேங்காய்ப்பால் அல்லது நெல்லிக்காய் சாறில் கலந்து தலைக்கு தடவி, 30 நிமிடங்கள் கழித்து தலை முடி கழுவலாம்.

உடல்: முருங்கை பொடியை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதால் உடல் பொலிவு பெறும்.

குறிப்பு :

முருங்கை பொடி (Moringa powder) இயற்கையின் அருளாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதோடு, முகத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைக்க உதவுகிறது. தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்களும் இதன் நன்மைகளைப் பெறலாம்.

Tags:    

Similar News