நட்சத்திர மண்டலத்தின் நாசா வெளியிட்ட அற்புதம்

நட்சத்திர மண்டலத்தின்  நாசா வெளியிட்ட அற்புதம்
X
நட்சத்திர மண்டலத்தின் அற்புதத்தை படம் எடுத்து நாசா வெளியிட்டுள்ளது.

பூமியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ள சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, விண்வெளியில் உள்ள பல அற்புத காட்சிகளை படம்பிடித்து வருகிறது. அந்த வகையில், பூமியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டு தொலைவில் உள்ள, அற்புதமாக காட்சியளிக்கும் சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தை படம்பிடித்துள்ளது.

இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு நாசா கூறியுள்ளதாவது: 50 ஆயிரம் ஒளி ஆண்டு விட்டம் கொண்ட இந்த நட்சத்திர மண்டலம், நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் பாதி அளவு ஆகும். சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் கருந்துளை உள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். இது நமது சூரியனை விட ஒரு பில்லியன் மடங்கு பெரியது. சோம்ப்ரெரோ நட்சத்திர மண்டலத்தின் இடது மற்றும் வலது ஓரங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இந்த நட்சத்திர மண்டலத்தை சுற்றியுள்ள வட்டத்தின் மையப்பகுதி மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும், நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதி இளம் ஊதா நிறத்திலும் காணப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Tags

Next Story