/* */

பென்சிலுக்கான காப்பிரைட்- ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்ட நாளின்று

பென்சிலுக்கான காப்பிரைட் -ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் இதே நாளில்தான் பெறப்பட்டது

HIGHLIGHTS

பென்சிலுக்கான காப்பிரைட்- ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்ட நாளின்று
X

பென்சிலுக்கான காப்பிரைட்- ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்ட நாளின்று

'அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர் மட்டும் விதிவிலக்கு. பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸியமானது.

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் வசித்த பழங்குடியினர், ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை உருண்டையாக்கி அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பாலை தங்கள் உடலில் பூசி, அதன் மீது இறகுகளை ஒட்டிக் கொண்டனர்.

அப்பகுதியில் சுற்றுலா சென்ற பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் இதைக் கண்டு ஆச்சரியம் கொண்டதோடு, வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். அதன் பின் 1770ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி சர் ஜோசப் பிரீஸ்ட்லே, இந்த மரத்திலிருந்து பாலை எடுத்து, அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து, ரப்பரின் குணங்களை வெளிப்படுத்தினார்.

அதே ஆண்டு, ரப்பர் துண்டுகளை வைத்து பிரிட்டன் பொறியாளர் எட்வர்டு நெய்மே ஆய்வுகள் செய்தார். சில குறிப்புகளை பென்சிலால் எழுதும் போது தவறுகள் ஏற்படவே, அதை அழிக்க ரொட்டித் தூள்களை எடுப்பதற்கு பதிலாக (அந்தக் காலத்தில் பென்சில் எழுத்துக்களை அழிக்க ரொட்டித் தூள்களைப் பயன்படுத்துவர்) தவறுதலாக ரப்பர் துண்டுகளை எடுத்து அழித்தார்.

பென்சில் எழுத்துக்கள் சுத்தமாகவும் விரைவாகவும் அழிப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டு, உடனே களத்தில் இறங்கினார். பென்சில் எழுத்துக்களை அழிக்கும் ரப்பர் துண்டுகளை சந்தைக்கு அறிமுகம் செய்தார். இதையடுத்து ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் இதே நாளில்தான் பெறப்பட்டது

🎩இப்போ ஒரு போதனை

பென்சில்:என்னை மன்னிக்க வேண்டும்.

✏ரப்பர்:எதற்காக மன்னிப்பு?

பென்சில்:நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?

✏ரப்பர்:நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்க படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். இதுதான் வாழ்க்கை ..


நம்மில் சிலர், பலருக்கு ரப்பராக இருக்கிறோம், வெளியே தெரியாமல்

Updated On: 30 March 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...