/* */

தக்காளி விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை

விருதுநகர் மாவட்டத்தில், விளைச்சல் அதிகமாக இருந்தும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தக்காளி விலை வீழ்ச்சி...  விவசாயிகள் கவலை
X

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 600 ஹெக்டேரில் தங்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 300 கிலோ வரை விளைச்சல் உள்ள கிடைத்தும், தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

போதிய மழை இல்லாத நிலையில் கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். நடவு செய்த 30 நாட்களுக்கு காய்கள் கிடைப்பதாலும், பராமரிப்பு குறைவு என்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஜனவரி முதல், பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை சாரல் மழை கைகொடுத்ததால், விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால். விலை வீழ்ச்சியால், தக்காளி கிலோ 5 ரூபாய்க்கும் குறைவாக தங்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உழவு, நடவு, உரம், பூச்சி கொல்லி உள்ளிட்ட செலவுகள் என்பது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் கடும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

Updated On: 29 April 2021 3:05 AM GMT

Related News