/* */

திருவண்ணாமலையில் மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்

திருவண்ணாமலையில் மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டத்தை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் மது ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்
X

மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் நெடுந்தூர ஓட்டம் திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோடு அருகில் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 800 பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர், எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் அண்ணா நுழைவாயில் வரை வந்தனர்.

பின்பு நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு இடையே பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளை மூன்று பிரிவுகளாக (6 முதல் 8 வகுப்பு வரை) ( 9 மற்றும் 10 ஆம் வகுப்பு) (11 மற்றும் 12ஆம் வகுப்பு) என கல்வித் துறை சார்பாக நடத்தப்பட்டது. மாரத்தான் தொடங்கும் இடம் மற்றும் முடியும் இடத்திலும் நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர். மு.பிரியதர்ஷினி, A.ராஜன் துணைக் காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், நகராட்சி ஆணையாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், சுகாதார பணிகள் துணை இயக்குனர், தீயணைப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மாவட்ட விளையாட்டு அலுவலர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 22 April 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்