/* */

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றம்

பெரியபாளையம் அருகே பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த செய்தி வெளிவந்ததை அடுத்து மருத்துவமனை தற்காலிகமாக துணை சுகாதார மருத்துவமனைக்கு மாற்றம்.

HIGHLIGHTS

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றம்
X

தற்காலிகமாக துணை சுகாதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 

பெரியபாளையம் அருகே பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர கோரிக்கை என்ற செய்தி இன்ஸ்டாநியூஸ் தளத்தில் வெளிவந்ததை அடுத்து மருத்துவமனை தற்காலிகமாக துணை சுகாதார மருத்துவமனையில் மாற்றம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட வெங்கல் கிராமத்தில் சுமார் 5000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெங்கல், கல்பட்டு, வெங்கல் குப்பம், ஆவாஜி பேட்டை, மாம்பள்ளம், பாகல்மேடு, செம்பேடு, காதர்வேடு, உள்ளிட்ட கிராம மக்கள் சேர்ந்த மக்கள் காய்ச்சல் தோல் நோய் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள்.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் கட்டி 42.ஆண்டுகள் ஆகிய நிலையில், தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்து சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு மற்றும் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் பூசுகள் உதிர்ந்து கட்டிடத்திற்குள் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தாக மாறியிருந்தது.


மேலும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கசிந்தும் மழை நீர் உள்ளே வருகிறது. எனவே இந்தப் பழுதடைந்த கட்டிடம் மிகவும் பலவீனமாக உள்ள காரணத்தினால் இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வதற்கு அச்சப்பட்டனர்.

எனவே இந்த கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என்று பலமுறை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் மற்றும் கிராம பொதுமக்களும் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை .

இது குறித்து நமது இன்ஸ்டாநியூஸ் தளத்தில் (6-03-2023) ஆம் தேதி செய்தி வெளியானது. இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காரணத்தினால் நோயாளிகளில் நலனை கருத்தில் கொண்டு வெங்கல் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள துணை சுகாதார நிலையத்தில் மாற்றப்பட்டது.

இந்த மருத்துவமனை செய்தியை வெளியிட்ட இன்ஸ்டாநியூஸ் தளத்திற்கு வெங்கல் கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Updated On: 28 March 2023 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!