/* */

நெல்லையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு

வரும் காலத்தில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்

HIGHLIGHTS

நெல்லையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரி அபூர்வா ஆய்வு
X

நெல்லை மாவட்டத்தில் பெய்த  மழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை நெல்லை மாவட்ட பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் கால சிறப்பு கண்காணிப்பு அதிகாரி அபூர்வ ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை டவுன் பகுதியில் இருக்கும் நெல்லை கால்வாய், காட்சி மண்டபம், அபிராமி நகர், கிருஷ்ண பேரி குளம், கண்டியபேரி குளம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் அவர் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் எதிர்பாராத அளவில் அதிக மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. ஏற்கனவே பருவமழை காலத்தில் பெய்த கன மழையால் அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகளவு மழையால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கபட்டது. கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளால் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.

மழையினால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள சாலைகள் சிதலமடைந்து உள்ளதை தற்காலிகமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக சாலைகளில் தற்காலிகமாக செப்பனிடுவதிலும் சிரமம் இருந்து வருகிறது.

இருப்பினும் ஜல்லி, மணல் கொண்ட கலவை மூலம் சாலைகளை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் இதுவரை 162 கி.மீ சாலைகளில் முதல் பகுதி பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெற்று சாலைகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது பெய்த தொடர் மழையினால் இதுவரை 2 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Nov 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...