/* */

திருநெல்வேலி மாநகராட்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

திருநெல்வேலி மாநகராட்சியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அந்தந்த வார்டுகளுக்கு இ.வி.எம். இயந்திரங்கள் அனுப்பப்பட்டது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
X

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பி வைக்கப்படும் இ.வி.எம். இயந்திரங்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாளை நெல்லை மாவட்டத்தில் 933 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள் மேலச்செவல், கல்லிடைகுறிச்சி உள்ளிட்ட 17 பேர் பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவட்டத்தில் 933 வாக்குச்சாவடிகள் உள்ளன. நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கு 408 பேரும், அம்பாசமுத்திரம் நகராட்சியில் 21 வார்டுகள்69 பேரும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் 84 பேரும், களக்காடு நகராட்சியில் 21 வார்டுகள் 129 பேரும், 17 பேரூராட்சிகளில் 264 வார்டுகளுக்கு 1100 பேர் என மொத்தம் 388 பதவிகளுக்கு 1790 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்தனர்.

இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி அந்தந்த வார்டுகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு எந்திரங்களை அனுப்பும் பணி இன்று காலை தொடங்கியது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி உள்ள 55 வார்டுகளுக்கும் அந்தந்த வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

தொற்றின் காரணமாக கிருமினாசினியும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் தெளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வாக்காளர்களுக்கு கிருமினாசினியும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா கிட் அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 491 வாக்குச்சாவடிகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்களும் 491 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்தில் கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதன்பிறகு வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக வாக்குப் பதிவு மையங்களில் உள்ள அலுவலர்களுக்கு இன்று சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சி பாளையங்கோட்டை உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றன.

Updated On: 18 Feb 2022 9:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!