/* */

பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
X

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்றது.20 இடங்களில் போட்டியிட்ட பாஜக நான்கு இடங்களில் வென்றது.

கடந்த 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவரைத் தேர்ந்தெடுக்க தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், தமிழகத்தில் பாஜகவுக்கு இடம் இல்லை என்று சொன்னவர்களின் கருத்தைப் பொய்யாக்கும் வகையில், இப்போது தமிழகத்தில் தாமரை மலர்ந்துள்ளது.

சட்டமன்றத்தைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களாக பாஜகவின் நான்கு எம்எல்ஏக்கள் செயல்படுவார்கள். அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவோம். தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மொழிக்காகவும் பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள். எங்கள் பணி சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடரும்" என்றார்.

சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் களமிறங்கிய பாஜக கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி, மொடக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளைக் கைப்பற்றிது.தற்போது பாஜக சட்டமன்ற குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சட்டசபைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெற்றிபெற்றவர்

Updated On: 9 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  2. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  3. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  5. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  6. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  7. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  8. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  9. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  10. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...