/* */

திருக்கார்த்திகை தீபத்திருவிழா: அகல் விளக்கு விற்பனை மும்முரம்

நெல்லையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அகல் விளக்குகள் வாங்குவதற்கு மக்கள் கடைகளுக்கு திரண்டு வந்தனர்.

HIGHLIGHTS

திருக்கார்த்திகை தீபத்திருவிழா: அகல் விளக்கு விற்பனை மும்முரம்
X

 நெல்லையில், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று மாலை அனைத்து வீடுகள் மற்றும் கோவில்களில் தீப விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த சில தினங்களாக நெல்லை மாநகரில் அகல் விளக்குகள் விற்பனை களைகட்டியது. மண் அகல் விளக்குகள், மட்டுமின்றி பீங்கான் விளக்குகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.

நெல்லை சந்திப்பு, பாளை மார்க்கெட், தச்சநல்லூர், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகளை விற்பனை செய்யும் கூடுதல் கடைகள் தோன்றியுள்ளன. அகல் விளக்குகளில் பாவை விளக்கு, தாமரை விளக்கு, பிரதோஷ விளக்கு, கிளி விளக்கு, தேங்காய் விளக்கு, சூலாயுத விளக்கு, கோபுர விளக்கு, ஒளி விளக்கு, யானை விளக்கு, விநாயகர் உருவத்துடன் கூடிய பஞ்சமுக விளக்கு என விதவிதமான விளக்குகள் விற்பனையாகின்றன.

இவை ரூபாய் 2 முதல் 200 வரையிலான விலைகளில் விற்கப்படுகின்றன. மேலும் மெழுகுவர்த்திகளும் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. 10 மெழுகுவர்த்தி உள்ள சிற்பிகள் ரூபாய் 20 முதல் 100 வரை விற்கப்பட்டன. விளக்குகள் வருகையால் மண் அகல் விளக்குகளின் விற்பனை பாதிப்பதாக அவற்றை தயாரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 19 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு